சமைக்காமல் பச்சை மீன் சாப்பிடுவது நல்லது என்று கூறி சிலர் தவறான செய்தியை அனுப்புகிறார்கள் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சங்கத்தின் ஆசிரியர், மருத்துவர் ஹரித அலுத்ஜே இதனைத் தெரிவித்தார்.
நன்கு சமைத்த மீன்கள் மூலம் கோரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மீன்களின் தோலில் உள்ள பக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள் செரிமான அமைப்பை கடுமையாக சேதப்படுத்தும் என்று மருத்துவர் ஹரித அலுத்ஜே குறிப்பிட்டார்.
மீன் சாப்பிட வேண்டுமானால் அதனை சுத்தம் செய்யவுமாறும் சமைக்குமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் மீன்வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலீப் வேதராச்சி, மக்கள் மீன் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கோரோனா அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ளதால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உடன் மீனை (அவிக்காத பச்சை மீன்) உட்கொண்டு காண்பித்தார்.
இந்த நிலையிலேயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளது.
