பட்ஜெட் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் நெருக்கடி

0

ஐக்கிய அமெரிக்காவின் புதிய வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் நிறைவேற்றப்படாமை காரணமாக பல அரச நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

அத்தியவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் தவிர்ந்த பல நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அதன்படி தேசிய பாதுகாப்பு, தபால் சேவை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, அவசர மருத்துவ சேவைகள், இடர் உதவி, சிறைச்சாலைகள், வரிவிதிப்பு மற்றும் மின்சாரம் போன்ற சேவைத் துறைகள் அத்தியவசிய சேவைகளாக கருதப்படுகின்றன. 

தேசிய பூங்காக்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் பல இதனால் மூடப்படவுள்ளன. 

அதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாநிலத்துக்கான தனது பயணத்தையும் கைவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here