பட்டதாரிகளை அரச சேவைக்கு ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
நாடுமுழுவதும் 341 நிலையங்களில் மார்ச் 25ஆம் திகதி பரீட்சை நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான பட்டதாரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆசிரியர்கள் நியமனம் இடம்பெறும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பரீட்சைக்கு பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டைகளை அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.