உரிய தொகையை செலுத்தாவிட்டால் வாக்குச் சீட்டு அச்சடிக்கப்படமாட்டாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்துப்பூர்வ அறிவித்தலை அரச அச்சகம் அனுப்பியுள்ளது.
இந்த தகவலை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மார்ச் 9ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு 770 மில்லியன் ரூபாயை விடுவிக்குமாறு திறைசேரியிடம் தேசிய தேர்தல் ஆணைக்குழு கேட்டிருந்தது.
எனினும் முதல்கட்டமாக 100 மில்லியன் ரூபாயை மட்டுமே தேர்தல் ஆணைக்குழுவுக்கு திறைசேரி விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.