Sunday, May 28, 2023
Homeஉள்ளூர் செய்திகள்பணவீக்கம் மேலும் குறைந்தது

பணவீக்கம் மேலும் குறைந்தது

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, மார்ச் மாதத்தில் பணவீக்கம் 49.2 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் 53.6 சதவீதமாக காணப்பட்டது.

உணவு வகை பணவீக்கம் பெப்ரவரியில் 49 சதவீதத்தில் இருந்து மார்ச் மாதத்தில் 42.3 சதவீதமாக குறைந்துள்ளது.

பெப்ரவரியில் 57.4 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் மார்ச் மாதத்தில் 54.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் பதிவான பணவீக்கம் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த பணவீக்க மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular