பந்தை சேதப்படுத்திய விவகாரம் – அணித்தலைவர் பதவியிலிருந்து சிமித் நீக்கம்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் சிமித் பதவி விலக்கப்பட்டார். அணியின் பதில் தலைவராக ரிம் பைனி நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

தென்னாபிரிக்க, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்த சமயத்தில், ஆஸ்திரேலிய அணி வீரர் கமரன் பேன்க்ரொப்ட் பந்தை சேதப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பேன்க்ரொப்ட், மஞ்சள் நிற துண்டு ஒன்றை வைத்து   பந்தை சேதப்படுத்துவது போட்டியை ஒளிபரப்பிக்கொண்டிருந்த கமரா பதிவாளர் ஒருவரால் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து தனது குற்றத்தை பேன்க்ரொப்ட் ஒத்துக்கொண்டார். அவரின் செயற்பாட்டை தான் அறிந்திருந்ததாக அணித்தலைவர் சிமித் ஏற்றுக்கொண்டார்.

இது தொடர்பான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை அணியை விட்டு விலகுமாறு ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணைக்குழு தெரிவித்தது.

அத்துடன், 3ஆவது போட்டியின் மிகுதியை அணியின் பதில் தலைவர் ரிம் பைனி  முன்னெடுப்பார் என அறிவித்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலிய,  அணித்தலைவர் சிமித் மற்றும் துணைத்தலைவர் வோர்னரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!