பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர முடியாது- அரசு

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று ஆபத்து இதுவரை குறையவில்லை என்றும் தினமும் நாட்டில் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்றும் கோவிட்-19 ஒழிப்பு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.

நாளை (21) முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு எடுத்த முடிவு குறித்து அவர் இன்று தனது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

“பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட பயண கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்க முடியாது.
தினசரி தெரிவிக்கப்படும் கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை குறைக்க பல வாரங்கள் ஆகும், மேலும் இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்றின் ஆபத்து குறையவில்லை.

கோரோனா வைரஸிலிருந்து தங்கள் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முறையாக திறக்கப்படும். சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றும் மருத்துவ வல்லுநர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!