பருத்தித்துறையில் அதிகாலையில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு; ஒருவர் சிக்கினார்

பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை வான் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை சுப்பர்மடம் சுடலைக்கு முன்பாக இந்த கைது நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

- Advertisement -hnb-2021

சுடலைக்கு முன்பாக வான் ஒன்றில் ஏற்பட்ட முற்பட்ட போது, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர். மற்றொரு சந்தேக நபர் தப்பித்துள்ளார்.

45 பொதிகளில் 95 கஞ்சா போதைப்பொருள் சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய வானும் மீட்கப்பட்டுள்ளது என்றும் பருத்தித்துறை பொலிஸார் கூறினர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!