Saturday, September 23, 2023
Homeஅரசியல்பஸ், லொறிகள் இறக்குமதித் தடையை தளர்த்த அரசு தீர்மானம்

பஸ், லொறிகள் இறக்குமதித் தடையை தளர்த்த அரசு தீர்மானம்

பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் சில வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு தீர்மானித்துள்ளது.

பொது போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் பாரவூர்திகள், இலகுரக பாரவூர்திகள் மற்றும் பேருந்துகளின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அரசிதழ். தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த வாரத்தில் அது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பைக் கருத்தில் கொண்டு மற்ற வாகனங்களின் இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்த மேலும் தாமதமாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

வாகன இறக்குமதி அதிகரிப்பின் ஊடாக டொலரின் பெறுமதி மீண்டும் உயர முடியும் எனவும் பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular