பாட்டியின் வேதனை குரங்குக்குப் புரிந்த அளவுக்கு கூட மனிதர்களுக்குப் புரியவில்லை, என்ன மாதிரியான உலகம் இது?!

கடந்த வாரம் இணையத்தில் வைரலாகிய ஒளிப்படம் இது. இந்தப் ஒளிப்படத்தை நன்கு உற்றுக் கவனியுங்கள். அந்தப் பாட்டியின் முகத்தில் வழியும் வேதனை உணர்வு பார்ப்போரை உருகச் செய்யும் விதத்தில் மனம் நெகிழச் செய்கிறது.

- Advertisement -

பாட்டியின் வேதனையைக் கூட, ‘அட இப்படி எத்தனை பேரை நாள்தோறும் பரபரப்பான வெளி இடங்களில் கடக்க நேர்கிறது. அவர்களை நின்று கவனிக்கக்கூட நேரமில்லை. வேலை தலைக்கு மேலே மூழ்கடிக்கக் காத்திருக்கையில் இப்போது இந்தப் பாட்டியின் வேதனை தானா எனக்குப் பெரிது?!’ என்ற ரீதியில் நம்மில் பெரும்பாலானோர் கடந்து விடுகிறோம். ஆனால், பாட்டியின் தோளின் மீது அரவணைப்பாக கை வைத்துக் கொண்டு அவரது வேதனையைச் செவி மடுக்கும் அந்தக் குரங்கைப் பார்க்கையில் அது கடந்து செல்பவர் யாருக்குமே சற்று அதிசயமாகத் தான் இருக்கிறது.

இதில் பரிதாபம் என்னவென்றால் அந்தப் பாட்டியின் வேதனைக் குரலை இந்தக் குரங்கு செவி மடுத்ததைப் போல சற்று ஆறுதலாக எண்ணக் கூட நம்மில் யாருக்கும் மனமிருப்பதில்லை என்று எண்ணும் போது இந்த விசித்திர உலகின் பரபரப்பை எண்ணி ஒரே சமயத்தில் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருவேறு பரிணாமங்களில் துக்கம் தொண்டையை அடைக்கிறது. எனக்கு மட்டுமல்ல இந்த ஒளிப்படத்தை காண நேரும் யாருக்குமேதான்!

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!