பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கம் – ஈட்டி எறிதலில் ஹேரத் உலக சாதனை

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத், இந்த தங்கப் பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தார்.

அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும், வெங்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றினர்.
2020 பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இலங்கை 42ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாராலிம்பிக் போட்டிகளில் இதுவரை குறைந்தது 45 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளன.

இதற்கிடையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் 47 தங்கப் பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 106 தங்கம், 30 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களை சீனா பெற்றுள்ளது.

கிரேட் பிரிட்டன் 24 தங்கம், 19 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 15 தங்கப் பதக்கங்கள், 17 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் இதுவரை 75 நாடுகள் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வென்றுள்ளன.

இதற்கிடையே இன்று பிற்பகலில், இலங்கையின் துலன் கொடித்துவக்கு மற்றும் சாமிந்த சம்பத் ஹெட்டியாராச்சி ஆகியோர் ஆண்கள் ஈட்டி எறிதல் – எஃப் 64 இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றனர்.