பிரதமர் மகிந்தவின் பாதுகாப்புப் பிரிவினர் இந்திய ‘கறுத்தப் பூனை’ படைப் பிரிவில் பயிற்சி பெற்றனர் – படை அதிகாரி தெரிவிப்பு

0

இந்தியாவின் மத்திய பயங்கரவாத எதிர்ப்புப் படை (என்.எஸ்.ஜி) இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை பாதுகாக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 படையினருக்கு பயிற்சி அளித்துள்ளது என்று இந்திய கொமாண்டோ படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய பூனைப் படை என அழைக்கப்படும் கொமாண்டோ படையின் 36ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே இந்திய கொமாண்டோ படையின் பணிப்பாளர் நாயகம் எஸ். எஸ்.தேஸ்வால், இதனைத் தெரிவித்தார்.

என்.எஸ்.ஜின் நெருக்கமான பாதுகாப்புப் படை, இலங்கையின் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் 21 பேருக்கு நெருக்கமான பாதுகாப்புத் திறன்களைப் பயிற்றுவித்துள்ளது.

இலங்கையின் பிரதமர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி பயிற்சியைப் பாராட்டினார் என்றும் தேஸ்வால் கூறினார்.

எவ்வாறாயினும், இலங்கை பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு இந்திய கொமாண்டோ படை பயிற்சியளித்த காலத்தை அவர் குறிப்பிடவில்லை..

(செய்திமூலம் – ரைம்ஸ் ஒப் இந்தியா)