புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்று ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது.
கட்சி சார்பற்ற அரசை அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையும் அரசுக்கு ஆதரவளிப்பது என்று யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி அறிவித்துள்ளது.