பிரதி சபாநாயகராக பெரமுன எம்.பி அஜித் ராஜபக்ச தெரிவு

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.

சிறிலங்கா பொதுஜன சார்பில் அஜித் ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரோஹினி கவிரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்மொழியப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் ரோஹினி கவிரதலன 78 வாக்குகளும் அஜித் ராஜபக்சவுக்கு 109 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அத்துடன் 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.