நாளைய தினம் (பெப்ரவரி 8) திட்டமிட்டபடி சுகயின விடுமுறை தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதென பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சு மட்டத்தில் பேச்சுக்கள் நடைபெற்ற போதிலும், அது வெற்றிகரமானதாக அமையவில்லை என்று இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தத்துக்கு எதிராகவே இந்தப் போராட்டத்தில் பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் ஈடுபடவுள்ளனர்.