புதிய அரசில் அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை – சு.கவும் தீர்மானம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் எந்த அமைச்சுப் பதவிகளையும் ஏற்கப்போவதில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விமல் வீரவன்ச, உதய கம்மன்பல அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் கூட்டமைப்பும் புதிய அரசில் இணையப்போவதில்லை என அறிவித்துள்ளன.