1979ஆம் ஆண்டின் பழைய பயங்கரவாதச் சட்டத்தைவிட புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட வரைவு மிகவும் கடுமையான அடக்குமுறைச் செயலாகும் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அடக்குமுறை அடிமைத்தனத்தையும், சர்வாதிகார வெறியையும் வளர்க்கும் செயல் என்பதால் புதிய பயங்கரவாதச் சட்ட வரைவை கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இந்த சட்டவரைவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் எவருக்கும் அவர்கள் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிப்பதில்லை என்றே கூறவேண்டும். இந்த சட்ட வரைவை கொண்டு வருபவர்கள் அல்லது அதற்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கே எதிர்காலத்தில் சரிவு ஏற்படும்” என்றும் கர்தினால் தெரிவித்தார்.