புதிய பிரதமராக தினேஷ் பதவியேற்பு

புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

இன்று முற்பகல் 10.20 மணிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டது.

நாட்டின் 27ஆவது பிரதமர் தினேஷ் குணவர்த்தன, இலங்கையின் முக்கிய இடதுசாரியான பிலீப் குணவர்த்தனவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.