புலமைப்பரிசில், ஏஎல் மாணவர்களுக்கு தனியார் கல்வி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் கால எல்லை அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை தொடர்பான தனியார் கல்வி நிலைய மற்றும் பிரேத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தமர்வுகள் தடை விதிக்கப்படும் திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை முடியும் வரை மேற்படி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான நடவடிக்கைகளுக்கு பெப்ரவரி 01ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.