புளியம்பொக்கணை நாகதம்பிரான் பொங்கல் நாளை; வெளிமாவட்ட அடியவர்களுக்கு அனுமதியில்லை

வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி – புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்தப் பொங்கல் விழாவில் பங்கேற்பதற்கு வெளிமாவட்ட அடியவர்களுக்கு அனுமதியளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உள்பட வடக்கில் கோரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானத்துக்கு வந்ததாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் என்.சரவணபவன் தெரிவித்தார்.

- Advertisement -

எனவே கிளிநொச்சி மாவட்ட அடியவர்கள் தமது நேர்த்தியை நிறைவேற்ற நாளை பொங்கல் விழா அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் என்.சரவணபவன் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!