அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையில் ஏழு பேர் கொண்ட அரச சேவை ஆணைக்குழுவின் நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அரச சேவை ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீரவை ஜனாதிபதி நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சித்தி மெரினா மொஹமட், நரசிங்க ஹேரத் முதியன்சேலாகே சித்ரானந்தா, பேராசிரியர் நாகநாதன் செல்வக்குமரன், மாணிக்க படத்துருகே ரோஹன புஷ்பகுமார, கலாநிதி அங்கம்பொடி தமிதா நந்தனி டி சொய்சா, ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் பல்லேகம சந்திரரத்ன பல்லேகம ஆகியோர் பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.