பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பிரதமர் ரணிலுக்கு முழு ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

நாட்டின் நலன் கருதி அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற செயற்பாட்டின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்குவது என்று ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இன்றைய நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

ஒரு பொறுப்பான அரசியல் கட்சி என்ற வகையில், தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பது அவசியம் என்று ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை கொள்கிறது.

எனினும் அரசு, ஐக்கிய மக்கள் சக்தியின் அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பாக தமது உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ள முற்பட்டால், அதற்கான ஆதரவை நிபந்தனையின்றி இடைநிறுத்தவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.