பொருளாதார நெருக்கடியினால் அடுத்த வாரம் பங்குச்சந்தை பூட்டு

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, திங்கட்கிழமை (ஏப்ரல் 18) முதல் ஐந்து நாட்களுக்கு கொழும்பு பங்குச்சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் ஐந்து வணிக நாட்களுக்கு நாட்டின் தற்போதைய நிலமை காரணமாக பங்குச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.