போராட்டக்காரர்க்ள் மீது வன்முறை; பெரமுன எம்பிக்கள் இருவர் கைது

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக ஆகிய இருவரும் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட மா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலில் உள்ள 22 பேரில் இவர்கள் இருவரும் அடங்குவர்.

காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் மக்கள் போராட்டம் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 22 பேரை விசாரணைகள், வாக்குமூலங்கள் பதிவு செய்தல் மற்றும் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் நேற்று பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் அடங்குகின்றனர்.

மொறட்டுவை மாநகர முதல்வர் சமன் லால் பெர்னாண்டோ, மகிந்த கஹந்தகம மற்றும் டான் பிரியசாத் ஆகியோரும் 22 பேரில் அடங்குவர்.