மதில் இடிந்து வீழ்ந்ததில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு; அரியாலை கிழக்கில் சம்பவம்

0

சட்டத்துக்குப் புறம்பான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருஒர் மதில் இடிந்து வீழ்ந்ததால் அதற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியில் இந்தச் சம்மவம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் நீண்ட காலமாக சட்டத்துக்குப் புறம்பாக மண் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவரே மதில் இடிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.