மதுரை ஆதீனம் பரிபூரணமடைந்தார்; சைவசமய உலகுக்கு பேரிழப்பு-ஆறு. திருமுருகன்

மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம்
மதுரை ஆதீனம் 292-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பரிபூரணமடைந்தார்கள். அவர்களின் பிரிவு சைவ உலகுக்கு பேரிழப்பாகும் என கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

- Advertisement -

சிறந்த அறிவும் ஆற்றலும் மிக்க சுவாமிகள் சைவசமயத்தின் பாதுகாவலனாக விளங்கியவர் – துணிந்து குரல் கொடுப்பவர்.

தமிழ்,ஆங்கிலம்,வடமொழிப் புலமைமிக்க சுவாமிகளுக்கு தென்நாட்டில் மட்டுமன்றி வடநாட்டிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது.

நல்லை ஆதீனம் மதுரை ஆதீன மரபைப் பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டது.நல்லை ஆதீனத்தின் வளர்ச்சிக்கு மூலமாக அமைந்த மதுரை ஆதீனத்தின் முதல்வரின் சமாதிச்செய்தி மிகவும் கவலை தரும் செய்தியாகும்.

சுவாமிகள் மதுரைச் சொக்கநாதரின் பாதக்கமலங்களில் பரிபூரணம் அடைந்து சைவ உலகை என்றும் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோமாக -என்றுள்ளது.

ஆறு.திருமுருகன்.
உப தலைவர் அகில இலங்கை இந்துமாமன்றம்.

உடல்நலக்குறைவால் மதுரை ஆதீனம், ஞானசம்பந்த அருணகிரிநாதர் (வயது-77) இன்று சிவபதமடைந்தார்.

சுவாச பிரச்னையால் அவதிப்பட்ட மதுரை ஆதீனம், கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதியன்று மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று (ஓக.12) தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று (ஓக.13) வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாச சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியானதையடுத்து இன்று இரவு 9.15 மணியளவில் சிகிச்சை பயனின்றி காலமானார்.

தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இதன்தலைவராக 292 வது குருமகா சந்நிதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார்.

சைவமும் தமிழும் இரு கண்கள் என வாழ்ந்து வந்தவர் ஆதீனம் அருணகிரிநாதர். தமிழ்தொண்டு, சமூக தொண்டு ஆன்மீக தொண்டு என ஈடுபட்டு வந்தவர்.

தான் நினைப்பதை சரி என்று நினைக்க கூடிய அரசியல் சமூக கருத்துக்களை முன்வைத்தவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி ஜெயலலிதாவுடன நட்பு பாராட்டி வந்துள்ளார்.

2019ல், திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரானான சுந்தரமூர்த்தி தம்பிரானை இளைய ஆதீனமாக அறிவித்து, ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் சூட்டினார்.

முன்னதாக ஆதீனம் தங்கி இருந்த அறைக்கு தர்மபுரி ஆதீனம் பூட்டி சீல் வைத்தார். வழக்கமாக ஆதீனம் நீண்ட காலம் மடத்திற்கு வராமல் இருந்தால் அவரது அறைக்கு சீல் வைப்பது வழக்கம். தற்போது ஆதீனம் காலமானதால் இன்று சீல் வைக்கப்பட்டது.

மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் சுவாமியின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!