மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கப்ராலுக்கு நியமனக் கடிதம் வழங்கினார் ஜனாதிபதி

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர், ஜனாதிபதியிடம் இருந்து நியமனக் கடிதம் பெற்றார்.

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

- Advertisement -

பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 வருட காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளார்.

மேற்படி நியமனக் கடிதம் பெறும் நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவும் கலந்துகொண்டிருந்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!