மன்னாரில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் ஜனாஸா நாளை வவுனியாவில் தகனம்

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் சடலத்தை அரச செலவில் வவுனியா நகர சபையால் பராமரிக்கப்படும் மின் தகன மயானத்தில் தகனம் செய்ய பணிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியரான அவரின் ஜனாஸாவை சமய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதியில்லாததால் அதனைப் பொறுப்பேற்க உறவினர்கள் மறுத்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

அதனால் அவரது ஜனாஸாவை நாளை வியாழக்கிழமை வவுனியா நகர சபையினால் பராமரிக்கப்படும் மின் தகன மயானத்தில் தகனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் முதலாவது கோவிட் -19 நோயாளி நேற்று உயிரிழந்தார்.

மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இருதய நோயாளியான அவர் மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக்காலை உயிரிழந்தார்.

அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!