மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிகாட்டினார்.

மேலும் கோரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தனர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை மருத்துவ விடுதியில் கோவிட் -19 நோயாளிகள் இருவர் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த விடுதியில் பணியாற்றிய மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் கோரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறிப்பட்டது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும் சுகாதார ஊழியர்கள் இருவரும் என நால்வர் சுயதனிமைப்படுத்தபட்டிருந்தனர்.

அவர்கள் நால்வருக்கும் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!