மன்னார் வைத்தியசாலை கோரோனா பிரிவின் தாதியர்கள் பலர் சுகயீன லீவு; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மன்னார் பொது வைத்தியசாலையில் கோரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளோரை கண்காணித்து பிசிஆர் பரிசோதனை முன்னெக்கப்பட்டும் நோயாளர் விடுதியில் கடமைக்கு அமர்த்தப்பட்ட 13 தாதிய உத்தியோகத்தர்களில் 7 பேர் விடுப்பில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதனால் 6 தாதிய உத்தியோகத்தர்கள் மட்டும் கடமையில் இருப்பதால் பணிச் சுமை அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையில் கோரோனா அறிகுறியுடன் சேர்க்கப்படுபவர்களை கண்காணிக்கவும் பிசிஆர் பரிசோதனையை முன்னெடுக்கவும் தனி நோயாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த விடுதியில் 13 தாதிய உத்தியோகத்தர்களுக்கு கடமை வழங்கப்பட்டது. அவர்களில் 7 சுகயீன விடுப்பு அறிவித்துவிட்டு கடமைக்கு சமூகமளிக்காமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் 6 தாதிய உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமையில் இருப்பதால் அவர்களுக்கு பணி சுமை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நோயாளர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நாடுமுழுவதும் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஓய்வின்றி பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடு இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே மாகாண அதிகாரிகள், இந்த விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் செம்மணியில் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது...
- Advertisement -

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related News

கோவிட் -19 நோயால் மேலும் இருவர் சாவு; இரண்டாவது அலையால் பாதித்தோர் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டியது

நாட்டில் இன்று (நவ.30) திங்கட்கிழமை கோவிட் -19 நோயாளிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118ஆக உயர்வடைந்துள்ளது.
- Advertisement -
error: Alert: Content is protected !!