மருத்துவ ஆலோசனை பெற வந்த பெண்ணைக் கொலை செய்த மருத்துவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

மருத்துவ ஆலோசனை பெற வந்த இளம் பெண்ணை வன்புணர்வுக்கு உள்படுத்தி பின் குற்றவாளியான மருத்துவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்ட மருத்துவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் மருத்துவருக்கு 15 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், தண்டப்பணத்தையும் விதித்தது. மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை உறுதி செய்ததுடன் அது நியாயமானதும் சட்டமானதும் என தீர்ப்பளித்தது.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி நீர்கொழும்பு ஆதார மருத்துவமனையின் சத்திரசிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த  மருத்துவர், இளம் பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்திய பின் கொலை செய்தார்.

2014ஆம் ஆண்டு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வண்புணர்வு மற்றும் கொலைக் குற்றத்திற்காக மருத்துவர் தண்டிக்கப்பட்டார்.

இந்த தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனு நீதியரசர்கள் சம்பத் அபேகோன், பி குமாரரட்ணம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

கொலைக்கு ஒரு நிமிடம் முன்பு குற்றம் சாட்டப்பட்டவரின் அறையில் பெண் இருந்தது உறுதி செய்யப்பட்டமை நீதிமன்றத்தில் தெரியவந்தது.

பெண் இறக்கும் போது வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதன்படி நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.