Sunday, May 28, 2023
Homeஅரசியல்மறுசீரமைக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் ஜூன் முதல் பயனாளிகளுக்கு உதவுதொகை

மறுசீரமைக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் ஜூன் முதல் பயனாளிகளுக்கு உதவுதொகை

வாழ்வாதார உதவித் தொகைகளைப் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நாடுமுழுவதும் உள்ள 340 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் தொடர்பான நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதி சரிபார்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

மதிப்பீட்டு காலம் முடிந்ததும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது மேன்முறையீடு செய்ய அனுமதிக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் ஜூன் மாதம் முதல் புதிய திட்டத்தின் மூலம் கொடுப்பனவை வழங்குவதற்கு சபை நம்பிக்கை கொண்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular