மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் நேற்றுமுன்தினம் (ஜூலை 6) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களது
இளநிலை சட்டத்தரணிகளினால் இந்தக் கூட்டம் யாழ்ப்பாணம் ஏற்பாடு செய்யப்பட்டது. யாழ்பபாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில்
நடத்தப்பட்டது.




இதன்போது சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி உரைகள் இடம்பெற்றன.
இந்த கூட்டத்தில் மேல் நீதிபதி, மாவட்ட நீதிபதிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன, தவத்திரு வேலன் சுவாமிகள், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடக்கு வலய முன்னாள் உப தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், ஜூன் 19ஆம் திகதி தனது 77ஆவது வயதில் காலமானார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்துறையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து இந்த நினைவஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.