Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்மறைந்த மருத்துவர் வேல் சாரங்கனின் "வாழ்க்கை" கவிதை தொகுப்பு வெளியீடு

மறைந்த மருத்துவர் வேல் சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை தொகுப்பு வெளியீடு

மருத்துவர், அமரர் வேல் சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை நூல் நேற்று (ஜூன் 24) வெளியீடு செய்துவைக்கப்பட்டது.

சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு சாரங்கனின் 31ஆம் நாள் நினைவு தினமான நேற்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பலாலி வீதி கோண்டாவிலில் உள்ள ராசமணி மண்டபத்தில் நடைபெற்ற ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வின் போது நடைபெற்றது.

மருத்துவர் வேல் சாரங்கன் மே 25ஆம் திகதி இயற்கை எய்தியிருந்தார்.

இந்நிலையில் சாரங்கனால் எழுதப்பட்டு தொகுக்கப்படாத கவிதைகளை தொகுத்து “வாழ்க்கை” எனும் கவிதை தொகுப்பாக சாரங்கனுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் (2004 உயர்தரம்) கல்வி கற்ற நண்பர்கள் சாரங்கனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular