Sunday, May 28, 2023
Homeஉள்ளூர் செய்திகள்மழையுடனான காலநிலை சில நாட்களுக்கு தொடரும்

மழையுடனான காலநிலை சில நாட்களுக்கு தொடரும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular