மாகாண, மாவட்ட மட்டத்தில் கட்சிகளைப் பதிவு செய்வது பற்றி ஆராய்வு

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சீஹேவ தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள மாகாண சபைகளை மக்கள் பிரதிநிதிகளுடன் செயல்படுத்துவதே தனது நிலைப்பாடு என்று அவர் கூறினார்.

இன்று பிற்பகல் ஊடக நிறுவனத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

தேர்தல் நாளில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் முன் வாக்களிப்புத் திட்டங்களை நிறைவேற்ற ஆணைக்குழு விரும்புகிறது.

ஊடகவியலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்ற துறைகளுக்கும் இது பொருந்தும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாக்களிக்க உதவும் திட்டங்கள் உள்ளிட்ட தேர்தல் சட்டங்களை திருத்துவதற்காக அமைக்கப்படவுள்ள தெரிவுக் குழுவு இந்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும்.

சில அரசியல் கட்சிகள் தேசிய அளவில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவற்றின் நடவடிக்கைகள் சில பகுதிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன – என்றார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....
- Advertisement -

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...

Related News

மன்னாரில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் ஜனாஸா நாளை வவுனியாவில் தகனம்

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் சடலத்தை அரச செலவில் வவுனியா நகர சபையால் பராமரிக்கப்படும் மின் தகன...
- Advertisement -
error: Alert: Content is protected !!