மாவிட்டபுரத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

மாவிட்டபுரம் பகுதியில் ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டவர் தொடருந்துடன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது – 46) என்பவரே உயிரிழந்தார்.

காங்கேசன்துறையில் இருந்து , கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடனேயே இந்த விபத்து இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.