மாவை கந்தன் ஆலயத்தில் கோடி நாமாஞ்சலி ஆராதனை ஆரம்பம் – 179 நாள்கள் இடம்பெறும்

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோயிலில் ஹிரண்யம், புஷ்பபத்மம், பஞ்சவில்வபத்ரம், ருத்திராக்ஷம், மூலிகைகள் சகிதம் கோடி நாமாஞ்சலி ஆராதனை நேற்றுமுன்தினம் திங்கட்கிமை ஆரம்பமாகி வரும் 2023 ஜனவரி 26ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இவ்வாறு ஆலய தர்மகர்த்தா மகாராஜாஸ்ரீ து.ஷ. இரத்தினசபாபதிக் குருக்கள் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தினமும் 10 ஷண்முகார்ச்சனை என அதிகாலை 5 மணிமுதல் தொடர்ந்து இரவு 9.30 மணிவரை 179 நாள்களில் கோடி நாமாஞ்சலி சகிதம் ஆராதனைகள் நடைபெற மாவைக்கந்தன் திருவருள் பாலித்துள்ளார்.

இவ்வைபவத்தில் மெய்யன்பர்கள் யாவரும் குடும்பசகிதமாக கலந்து உபயங்களை ஏற்று நடாத்தி தாங்கள் நினைத்த நற்காரியங்கள் சித்திபெற மாவைக்கந்தபெருமான் பாதங்களை வணங்கி அவரது திருவருட்கடாக்ஷங்களை பெற்று ஆனந்தமாய் சுகமாக வாழ மாவைக்கந்தன் அருள்பாலித்துள்ளார்.

சங்கல்ப பலாபலன்கள்
சுகவாழ்வு வாழ, தொழில் லாபம் பெற, சந்தானம் பெருக, நிலம் அமைய, வியாபாரம். விவசாயம் தொடங்க – விருத்தியடைய, குடும்ப சகிதமாக நல்வாழ்வுவாழ, கல்வி பெருக, களத்திரதோஷம் திருமாங்கல்ய தோஷம் நீங்க, சகல சாபங்கள்- பாவங்கள் நிவர்த்தியாக, பிரயாண தடங்கல் நீங்க, பொன், தங்கம், வெள்ளி, இரத்தினம் பொருள் பெருக, அபிவிருத்தி அதிர்ஷ்ட லாபம் பெற, சகல ஜீவராசிகள் சுகவாழ்வு வாழ, சகல கஷ்டங்கள், தொல்லைகளகன்று நினைத்த நற்காரியங்கள் கைகூட, உலகத்தில் அமைதி, சாந்தி நிலவி ஒற்றுமை மேலோங்க, நோயற்ற நீண்ட வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற, அகிலத்தில் வாழும் மக்கள் இன, மத, மொழி, வேறுபாடுகள் இன்றி அமைதியாக ஒற்றுமையாக வாழ்க்கை வாழ வேண்டி, சூரிய, சந்திர, நட்சத்திரங்கள், ஆத்மா, பஞ்சபூதங்களுடன் இஷ்டதெய்வங்கள், குலதெய்வங்களின் ஆசிகள் பெறவும்

இவ் ஆராதனை நிகழ்வுகளில் மெய்யன்பர்கள் யாவரும் குடும்பசகிதமாக கலந்து கொள்வதோடு உபயங்களை ஏற்று நடாத்த விரும்புபவர்கள் ஆலய தொலைபேசி இலக்கங்களான 021-2243334, 077-1042257 தொடர்பு கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றீர்கள் – என்றுள்ளது.