மினுவாங்கொட கோரோனா பரவல்; பாதித்தோர் எண்ணிக்கை 2,014ஆக உயர்வு

0

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கோரோனா பரவல் தொடர்சியில் மேலும் 42 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று சனிக்கிழமை மாலை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார்.

அவர்களில் 22 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள். ஏனைய 20 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை மொத்தம் 115 பேருக்கு கோவிட் -19 நோய்ப் பாதிப்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோரோனா தொற்றினை அடுத்து 2 ஆயிரத்து 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை 5 ஆயிரத்து 469 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 ஆயிரத்து 395 பேர் முழுமையாகச் சுகமடைந்துள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர்.