மினுவாங்கொட பொலிஸ் நிலைய சகல பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டனர்

0

மினுவாங்கொட பொலிஸ் நிலைய அனைத்து உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

மினுவாங்கொட பொலிஸ் நிலைய சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு கோரோனா தோற்றுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டது.

அவருடைய மகன் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

அதனையடுத்தே மினுவாங்கொட பொலிஸ் நிலைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.