மின்சார சபையின் ஒட்டுமொத்த தொழிற்சங்கங்களும் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் – மின் விநியோகத் தடைக்கு அரசே பொறுப்பு என்றும் அறிவிப்பு

திங்கட்கிழமை (09) அரச ஆதரவாளர்களால் கோத்தா கோ கம மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து 14 இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.