“முதல்வனுடைய முதற்தரமான செய்திகளுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். உடனுக்குடன் மிக விரைவாக செய்தி தரப்படுகின்றது. பலரும் முக்கியமான செய்திகளை முதல்வன் ஊடாக உடனடியாகவே அறிகின்றார்கள்”
இவ்வாறு அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது;
முதல்வன் இன்று நான்காவது ஆண்டில் கால் அடி வைக்கின்றான். இந்த வேளையில் முதல்வனின் ஏற்பாட்டாளர்களுக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

முதல்வனுடைய முதற்தரமான செய்திகளுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். உடனுக்குடன் மிக விரைவாக செய்தி தரப்படுகின்றது. பலரும் முக்கியமான செய்திகளை முதல்வன் ஊடாக உடனடியாகவே அறிகின்றார்கள்.
இதனை நான் பல விடயங்களில் அவதானித்துள்ளேன். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை, எமது அருட்பணியாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை போன்ற செய்திகளை முதல்வன் உடனுக்குடன் வெளியிட்டான்.
இவ்வாறு பல விடயங்களை உடனுக்குடன் முதல்வன் அறியத்தந்துகொண்டிருக்கின்றான். எனவே தொடர்ந்தும் இத்தகைய பணி தொடரவேண்டும்.
இளையோர் மட்டில் இவை இன்னும் கொண்டு செல்லப்படவேண்டும். தமிழ்த்தேசியம் சார்ந்து எமது மக்களை ஒருங்கணைக்கின்ற களமாக – தளமாக அமையும் என நம்பி முதல்வனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றுள்ளது.