மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க நாடாளுமன்றப் பேரவை நாளை கூடுகிறது

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் வெற்றிடங்களுக்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனம் தொடர்பில், நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றப் பேரவை கூடி முடிவெடுக்கவுள்ளது.

நாடாளுமன்ற பேரவை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நாளை திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது. இதன்போது இவ்விடயங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்துக்கு 10 மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த பிரதி மன்றாடியார் அதிபதிகள் இருவரின் பெயர்களும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திலிருந்து இருவரின் பெயர்களும் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் மேனகா விஜயசுந்தர, டி.என்.சமரகோன், எம்.பிரசாந்த டி சில்வா, எம்.ரி.எம் லாபர், சி.பிரதீப் கீர்த்திசிங்க, சம்பத் அபேகோன், எம்.எஸ்.கே.பி.விஜயரத்ன, ஆர்.குருசிங்க, ஜி.ஏ.டி.கணேபொல, கே.கே.ஏ.வி.சுவர்ணாதிபதி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த பிரதி மன்றாடியார் அதிபதிகள் (SENIOR DEPUTY SOLICITORS GENERAL) மாயதுன்ன குரே, பிரபாகரன் குமாரரட்ணம் ஆகிய இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திலிருந்து நேரடியாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமனம் வழங்க டபிள்யூ.எம்.என்.பி.இத்தவல, சம்பத் மென்டிஸ் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பதில் பொலிஸ் மா அதிபர், சி.டி.விக்ரமரத்னாவை பொலிஸ் மா அதிபராக நியமிக்கவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பரிந்துரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரங்களை ஆராய்ந்து நாடாளுமன்ற பேரவை நாளை ஒப்புதல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பாய அபேவர்த்தன தலைமையிலான நாடாளுமன்றப் பேரவையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அதன் செயலாளராக பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Must Read

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் 3 நாளைக்கு விடுமுறை

கிழக்கு மாகாண பாடாசாலைகள் அனைத்தும் நாளை (டிசெ.2) புதன்கிழமை தொடக்கம் வரும் வெள்ளிக்கிழமை (டிசெ.4) வரை மூடப்படுவதாக மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.
- Advertisement -

கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் செம்மணியில் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது...

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

Related News

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
error: Alert: Content is protected !!