Wednesday, December 6, 2023
HomeUncategorizedமேலும் பல பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன

மேலும் பல பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன

மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கை அடைவதற்கும் இது உதவும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுங்கத்துறையின் வருமான இலக்குகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் பின்னர் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“முதல் 03 மாதங்களுக்கு சுங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள வருமான இலக்கு 270 பில்லியன் ரூபாவாகும்.

ஆனால் அந்த காலகட்டத்தில் கிடைத்த வருமானம் எதிர்பார்த்த வருமானத்தை விட 12 சதவீதம் குறைவாகவே காட்டப்பட்டுள்ளது.

2021இல், 485 பொருட்களும், 2022ல் 750 பொருட்களும் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டன.

இதன்படி, இது தொடர்பான கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும். மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்” என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular