மேலும் 233 பேருக்கு கோரோனா தொற்று

நாட்டில் மேலும் 233 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று (நவ.18) புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒக்டோபர் 4ஆம் திகதிக்கு பின் ஏற்பட்ட மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டியது.

அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 18 ஆயிரத்து 308 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 587 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 66 பேர் உயிரிழந்துள்ளனர்.