இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக இந்திய அரசினால் வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில் மேலும் 50 பேருந்துகளின் இன்று (5) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவினால் குறித்த பேருந்துகளின் ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்ப செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசினால் இந்த பேருந்துகள் வழங்கப்படுகின்றன. அதன் முதல் 75 பேருந்துகள் சமீபத்தில் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும் 40 பேருந்துகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 165 பேருந்துகளாக அதிகரித்துள்ளன.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்திய அரசிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் மார்ச் 2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.