மேலும் 61 பேருக்கு கோரோனா தொற்று

0

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கோரோனா பரவல் தொடர்சியில் மேலும் 61 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த தகவலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள். ஏனைய 51 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோரோனா தொற்றினை அடுத்து ஆயிரத்து 850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை 5 ஆயிரத்து 305 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 ஆயிரத்து 385 பேர் முழுமையாகச் சுகமடைந்துள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர்.