Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சாவு - நெல்லியடியில் அதிகாலை சம்பவம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சாவு – நெல்லியடியில் அதிகாலை சம்பவம்

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கலிகை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றைச் சேர்ந்த செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது-31), கரவெட்டி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது -29) என்ற இருவரே உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular