மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்து; குடும்பத்தலைவர் சாவு – மற்றொருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி வதிரியில் இந்தச் சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

- Advertisement -

சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த வீரவாகுப்பிள்ளை கெங்கேஸ்வரன் (வயது-32) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியது. மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் உயிரிழந்தார். பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர் படுகாமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!