வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரின் 200ஆவது ஆண்டினை முன்னிட்டு நடத்தப்படும் யாழ்ப்பாணம் மாவட்ட கழகங்களுக்கு இடையேயான ரி20 சுற்றுப்போட்டி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னல் மைதானத்தில் இன்று காலை 8.30 மணிக்கு சுற்றுத் தொடர் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திருமதி ருசிறா குலசிங்கம் ஆரம்பித்துவைத்தார்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆரம்பமான பற்றிக்கோட்டா செமினரியின் உருவாக்கத்தின் 200ஆவது ஆண்டினைக் குறிக்கு வகையில் இந்த வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணக் கல்லூரின் பழைய மாணவர் சங்கத்தின் விளையாட்டுக் கழகமான ஓல்ட் கோல்ட்ஸ் நடத்தும் யாழ்ப்பாணம் மாவட்ட கழகங்களுக்கு இடையேயான ரி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. 27 கழகங்கள் பங்கேற்கும் இந்த சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமானது.
முதலாது போட்டியில் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் அணியை எதிர்த்து திருநெல்வேலி ஸ்ரீ காமாட்சி அணி மோதியது.
நாளை ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னல் மைதானத்தில் காலை 8 மணி முதல் 6 அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் இடம்பெறவுள்ளன.



